நெசவு கவிதை

சதுரடி மூவாயிரம் ரூபாய்
மதிப்புள்ள
பாரதிநகர் முதல் தெருவில்தான்
இப்போது நீங்கள்
நின்று கொண்டிருக்கிறீர்கள்.

இந்த நிமிடம் உங்கள்
நாசியைத் துளைக்கிற
நெய்வாசம் வீசும்
பொங்கல் பிரசாதம் வேண்டுமெனில்
இரண்டாது தெருவிலிருக்கும்
சௌண்டம்மன் கோவிலின்
சாயங்கால பூசைவரை
காத்திருக்க வேண்டும்.

ஒராண்டுக்கு முன் வந்திருந்தால்
அந்த கோயிலை அங்கே நீங்கள்
பார்த்திருக்க முடியாது.

அதோ சற்று தூரத்தில்
ஈரிழைத் துண்டெடுத்து
மாராப்பாய் போர்த்தியிருக்கும்
அந்த நைட்டியணிந்த பெண்கள்
இங்கிலீஸ் மீடிய ஸ்கூல்
வேனுக்காக காத்திருக்கிறார்கள்.

இரண்டாண்டுகளுக்கு முன் வந்திருந்தால்
இந்தக் காட்சி உங்களுக்கு
காணக் கிடைத்திருக்காது.

இப்போது உங்கள் கண்ணெதிரே
கம்பீரமாய் நிற்கும்
அந்த அரசியல்வாதியின்
அரண்மனைப் போன்ற
வீடிருக்கும் இடத்தில்தான்
மூன்றாண்டுகளுக்கு முன்னால்
செங்கல்,மணல்,ஜல்லி கிடைக்குமென்ற
போர்டிருந்தது.

அப்போதெல்லாம்
கோழிகூவும் காலைவேளைகளில்
நீட்டியிருக்கும் பாவுநூல்களுக்கு
இடைஞ்சலாய்
எமன்போல் வந்து நிற்கும்
மணல் லாரிகள்.

அதோ…
எம்ஜிஆர் பாடலை பாடியபடி
சைக்கிளை மிதித்துக்கொண்டு
எதிரே வரும்
தபால்காரரை கேளுங்கள்…
அவர் சொல்வார்:
அந்த ஒத்தை கைத்தறிக்காரன் குடும்பம்
குடியேறும்வரை
இந்த பாரதிநகர்
கரட்டூர் என்றே அழைக்கப்பட்டது என்று.

– சேலம் சீனிவாசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Author

About

Iyandurai is a textile enthusiast and storyteller who explores fabric technology, fashion evolution, and industry insights. He is a visionary in the textile world, blending heritage with innovation to create value through creativity and experience. Dedicated to sharing knowledge, inspiring ideas, and building futures.


Contact

Recent Comments

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031