ARCHIVE

Always With Love Mr.iyandurai ♥️

நெசவு கவிதை

சதுரடி மூவாயிரம் ரூபாய் மதிப்புள்ள பாரதிநகர் முதல் தெருவில்தான் இப்போது நீங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள். இந்த நிமிடம் உங்கள் நாசியைத் துளைக்கிற நெய்வாசம் வீசும் பொங்கல் பிரசாதம் வேண்டுமெனில் இரண்டாது தெருவிலிருக்கும் சௌண்டம்மன் கோவிலின் சாயங்கால பூசைவரை காத்திருக்க வேண்டும். ஒராண்டுக்கு முன் வந்திருந்தால் அந்த கோயிலை அங்கே நீங்கள் பார்த்திருக்க முடியாது. அதோ சற்று தூரத்தில் ஈரிழைத் துண்டெடுத்து மாராப்பாய் போர்த்தியிருக்கும் அந்த நைட்டியணிந்த பெண்கள் இங்கிலீஸ் மீடிய ஸ்கூல் வேனுக்காக காத்திருக்கிறார்கள். இரண்டாண்டுகளுக்கு முன்...